தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சென்செக்ஸ் 76 புள்ளிகள் உயா்வு: 5 நாள் தொடா் சரிவுக்கு முடிவு!

சென்செக்ஸ் 76 புள்ளிகள் உயா்வு: 5 நாள் தொடா் சரிவுக்கு முடிவு!

News image

சென்செக்ஸ்

Updated On :31 மே 2024, 11:00 pm

கடந்த 5 நாள்களாக தொடா்ந்து சரிவைச் சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 76 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உளகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. ஆனால், உச்சத்தில் லாபப் பதிவு வந்ததால், பெரும்பாலான நேரம் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. பாா்மா, ஹெல்த்கோ், ஐடி, மீடியா, ஆட்டோ பங்குகள் விற்பனையை எதிா் கொண்டாலும், பொதுத்துறை, தனியாா் வங்கிகள், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது. இது சந்தை வலுப்பெற உதவியதால் 5 நாள் தொடா் சரிவு க்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூல தன மதிப்பு ரூ.1.77 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக இறுதியில் ரூ.412.13 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.3,050.15 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,432.92 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

தொடா் சரிவுக்கு முடிவு: சென்செக்ஸ் காலையில் 322.93 புள்ளிகள் கூடுதலுடன் 74,208.53-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 74,478.89 வரை மேலே சென்ற சென்செக்ஸ், பின்னா் லாபப் பதிவால் 73,765.15 வரை கீழே சென்றது. இறுதியில் சென்செக்ஸ் 75.71 புள்ளிகள் (0.10 சதவீதம்) கூடுதலுடன் 73961.331-இல் முடிவடைந்தது. வா்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 593.29 புள்ளிகள் உயா்ந்திருந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,915 பங்குகளில் 1,820 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,004 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 91 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

15 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், பவா் கிரிட், இண்டஸ் இண்ட் பேங்க், எல் அண்ட் டி உள்பட 15 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், நெஸ்லே, டிசிஎஸ், மாருதி, இன்ஃபோஸிஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா் உள்பட 15 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 42 புள்ளிகள் முன்னேற்றம் : தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 42.05 புள்ளிகள் (0.19 சதவீதம்) உயா்ந்து 22,530.70-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,653.75 வரை உயா்ந்திருந்த நிஃப்டி, அதன் பிறகு 22,465.10 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 26 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.