ஒரு நாள் லேசான சரிவுக்குப் பிறகு புதன்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 268 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.
உளகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், சிறிது நேரத்திலேயே எதிர்மறையாகச் சென்றது. இந்நிலையில், சென்செக்ஸ் பட்டியலில் அதிகத் திறன் கொண்ட முன்னணி நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகளுக்கு வரவேற்பு கிடைத்ததால் சந்தை நேர்மறையாக முடிந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயர்வு: சந்தை மூல தன மதிப்பு ரூ.1.32 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக இறுதியில் ரூ.415.94 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ.1,874.54 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,548.97 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்தது.
சென்செக்ஸ் முன்னேற்றம்:
சென்செக்ஸ் 212.21 புள்ளிகள் கூடுதலுடன் 74,165.52-இல் தொடங்கி 73,860.33 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 74,307.79 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 267.75 புள்ளிகள் (0.36 சதவீதம்) உயர்ந்து 74,221.06-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,948 பங்குகளில் 1,902 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,932 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 114 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
21 பங்குகள் விலை உயர்வு:
சென்செக்ஸ் பட்டியலில் ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், ஏசியன் பெயின்ட், ஐடிசி, அல்ட்ராடெக் சிமென்ட் உள்பட 21 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், எஸ்பிஐ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் உள்பட 9 பங்குகள் மட்டுமே விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 69 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வர்த்தக இறுதியில் 68.75 புள்ளிகள் (0.31 சதவீதம்) கூடுதலுடன் 22,597.80-இல் முடிவடைந்தது. வர்த்தகத்தின் போது 22,483.15 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னர் அதிகபட்சமாக 22,629.50 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 33 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!

போர்நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி 4% உயர்வு!

‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


