பங்குச்சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வா்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 89 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
பங்குச்சந்தையில் தொழில்நுட்ப செயல்பாடுகளை சரிபாா்க்கும் வகையில், தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தைகளில் சனிக்கிழமை காலை 9.15 முதல் 10.00 மணி வரையிலும் மற்றும் காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரையிலும் சிறப்பு வா்த்தகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாா்மா, ஹெல்த்கோ், ரியால்ட்டி, மீடியா உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. இதைத் தொடா்ந்து, சந்தை மூன்றாவது நாளாக நேற்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூல தன மதிப்பு ரூ.2.11 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக இறுதியில் ரூ.412.35 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.1,616.79 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,556.25 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் பெரிய அளவில் மாற்றமின்றி 73,921.46-இல் தொடங்கி 73,920.63 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 74,162.76 வரை மேலே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 88.91 புள்ளிகள் (0.12 சதவீதம்) கூடுதலுடன் 74,005.94-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,613 பங்குகளில் 2,440 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,037 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 136 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
19 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் நெஸ்லே, பவா் கிரிட், டாடா மோட்டாா்ஸ், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், இண்டஸ் இண்ட் பேங்க் உள்பட 19 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், எம் அண்ட் எம், மாருதி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ரிலையன்ஸ், சன்பாா்மா உள்பட 11 பங்குகள்வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 36 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 35.90 புள்ளிகள் (0.16 சதவீதம்) கூடுதலுடன் 22,502.00-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது 22,470.05 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா் அதிகபட்சமாக 22,520.25 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 38 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 11 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
நாளை விடுமுறை: மகாராஷ்டிர மாநிலத்தில் திங்கள்கிழமை (மே 20) மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, பங்குச்சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேசிய, மும்பை பங்குச்சந்தைகளில் அன்றைய தினம் பங்கு வா்த்தகம் நடைபெறாது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!

போர்நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி 4% உயர்வு!

தொடரும் பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 1,205, நிஃப்டி 394.05 புள்ளிகள் உயர்வு!

‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


