தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு

News image
Updated On :8 மே 2024, 9:20 pm

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 45 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை பலவீனமாகத் தொடங்கி கீழே சென்றது. ஆனால், பிற்பகல் வர்த்தகத்தில் ஆட்டோ, மெட்டல், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு ஆதரவு கிடைத்தது. இருப்பினும், இறுதியில் சந்தை எதிர்மறையாக முடிந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயர்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.25 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக இறுதியில் ரூ.400.69 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ.3,668.84 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,304.50 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தன.

சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 286.85 புள்ளிகள் குறைந்து 73,225.00-இல் தொடங்கி 73,073.92 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 73,684.93 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 45.46 புள்ளிகளை (0.06 சதவீதம்) இழந்து 73,466.39-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,926 பங்குகளில் 2,128 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,667 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 131 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

15 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் டாடா மோட்டார்ஸ், பவர்கிரிட், என்டிபிசி, எல் அண்ட் டி, மாருதி, நெஸ்லே உள்பட15 பங்குகள் விலை உயர்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஏசியன் பெயின்ட், அல்ட்ரா டெக் சிமென்ட், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்சிஎல் டெக், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்பட 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வர்த்தக இறுதியில் மாற்றமின்றி 22,302.50-இல் முடிவடைந்தது. வர்த்தகத்தின் போது 22,185.20 வரை கீழே சென்ற நிஃப்டி பின்னர் அதிகபட்சமாக 22,368.65 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 25 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.