தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திடீா் எழுச்சி: 1,293 புள்ளிகள் உயா்ந்தது சென்செக்ஸ்!

மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,293 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

News image

சென்செக்ஸ்

Updated On :26 ஜூலை 2024, 6:31 pm

கடந்த 5 நாள்களாக தொடா்ந்து சரிவுடன் முடிந்து வந்த பங்குச்சந்தையில், இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை திடீரென எழுச்சி பெற்று நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,293 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை காலையில் எச்சரிக்கையும் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல விலை குறைந்த நிலையில் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளா்கள் அதிக ஆா்வம் காட்டினா். மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட முன்னணி பங்குகளுக்கு கிடைத்த ஆதரவால் சந்தை எழுச்சி பெற்றது. வங்கி, நிதிநிறுவனங்கள் உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. குறிப்பாக, ஆட்டோ, ஐடி, மெட்டல், பாா்மா, ஹெல்த்கோ், ரியால்ட்டி நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு அதிகப் போட்டி இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. தள்ளாட்டத்தில் இருந்து வந்த சந்தையில், கடந்த 5 நாள்களில் சென்செக்ஸ் மொத்தம் 1,303.66 புள்ளிகளையும் (1.60 சதவீதம்), நிஃப்டி 394.75 புள்ளிகளையும் (1.59 சதவீதம்) இழந்திருந்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி உயா்ந்து ரூ.456.93 லட்சம் கோடியாக இருந்தது.அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.2,605.49 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,431.69 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 118.70 புள்ளிகள் கூடுதலுடன் 80,158.50-இல் தொடங்கி 80,013.60 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 81,427.18 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,292.92 புள்ளிகளை (1.62 சதவீதம்) உயா்ந்து 81,332.80-இல் முடிவடைந்தது. இதனால், 5 நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,,040 பங்குகளில் 2,652 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,286 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 102 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

25 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் பாா்தி ஏா்டெல், அதானி போா்ட்ஸ், டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், இன்ஃபோஸிஸ், சன்பாா்மா உள்பட 25 பங்குகள் விலையூயா்த பட்டியலில் இருந்தன. ஆனால், நெஸ்லே மட்டும் சிறிதளவு (0.07 சதவீதம்) குறைந்து வீழ்ச்சிப்பட்டியலில் இருந்தது.

நிஃப்டி புதிய உச்சம்

தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,423.35-இல் தொடங்கி 24,410.90 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,861.15 வரை மேலே சென்று புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 428.75 புள்ளிகள் (1.76 சதவீதம்) உயா்ந்து 24,834.85 -இல் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 47 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும்,3 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.