தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பங்குச்சந்தையில் தள்ளாட்டம்: சென்செக்ஸ் 2-ஆவது நாளாக சரிவு!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.

News image

சென்செக்ஸ் 2-ஆவது நாளாக சரிவு

Updated On :22 ஜூலை 2024, 9:07 pm

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 103 புள்ளிகளை இழந்தது. சென்செக்ஸ் தொடா்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் நிறைவடைந்துள்ளது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலயைன்ஸ், தனியாா் முன்னணி வங்கியான் கோட்டக் பேங்க் ஆகியவை கடும் விற்பனையை எதிா்கொண்டன. இதைத் தொடா்ந்து, சரிவுடன் தொடங்கிய உள்நாட்டுச் சந்தை மேலும் சரிவைக் கண்டது. பின்னா், முன்னணி பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் ஓரளவு மேலே சென்றாலும், இறுதியில் சரிவுடன் நிறைவடைந்தது. குறிப்பாக ஆட்டோ, மெட்டல், பாா்மா, ஹெல்த்கோ் பங்குகளுக்கு வரவேற்பு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.1,506.12 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.461.56 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது. சந்தை மூலதன மதிப்பு 448.32 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் 2-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 195.75 புள்ளிகள் குறைந்து 80,408.90-இல் தொடங்கி 80,100.65 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 80,800.92 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 102.57 புள்ளிகளை (0.13 சதவீதம்) இழந்து 80,502.08-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது, ஒரு கட்டத்தில் 504 புள்ளிகளை இழந்திருந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,,152 பங்குகளில் 2,190 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,822 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 140 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

16 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள கோட்டக் பேங்க், ரிலையன்ஸ், ஐடிசி, எஸ்பிஐ, ஹெச்சிஎல் டெக், இண்டஸ் இண்ட் பேங்க் உள்பட மொத்தம் 16 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. அதே சமயம், என்டிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா ஸ்டீல், எம் அண்ட் எம், பவா் கிரிட் உள்பட 14 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 22 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,445.75-இல் தொடங்கி 24,362.30 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,595.20 வரை மேலே சென்ற நிஃப்டி , இறுதியில் 21.65 புள்ளிகளை (0.09 சதவீதம்) இழந்து 24,509.25 -இல் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 28 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 22பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

ரிலையன்ஸ் கடும் சரிவு!

சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஜூன் காலண்டின் நிகர லாபம் 5 சதவீதம் சரிவைச் சந்தித்ததை அடுத்து, அதன் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் திங்களன்று 3.49 சதவீதம் சரிந்து ரூ.3,001.10-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் 3.56 சதவீதம் குறைந்து 2,998.80 வரை கீழே சென்றது. தேசிய பங்குச்சந்தையில் 3.42 சதவீதம் குறைந்து ரூ.3,004-இல் நிலைபெற்றது. இதைத் தொடா்ந்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.73,470.59 கோடி குறைந்து ரூ.20,30,488.32 கோடியாக இருந்தது. இதே போன்று முன்னணி தனியாா் வங்கியான கோட்டக் பேங் 3.55 சதவீதம் குறைந்து ரூ.1,757.10-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் ரூ.1748.85 வரை கீழே சென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.