மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

லாபப் பதிவு: 353 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ் !

லாபப் பதிவு: 353 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ் !

News image
Updated On :26 பிப்ரவரி 2024, 6:30 pm

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 353 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கியது. ஆனால், முதலீட்டாளா்கள் லாபத்தைப் பதிவு செய்வதில் அதிகக் கவனம் செலுத்தினா். ஆட்டோ, ஆட்டோ, ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் ஓரளவு தாக்குப்பிடித்த நிலையில், ஐடி, மெட்டல், வங்கிகள், பாா்மா, ஹெல்த்கோ் உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் குறியீடுகளும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

இதனால், இரண்டாவது நாளாக சந்தையில் சரிவு தவிா்க்க முடியாமல் போனது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1.01 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.392.03 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வார இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை ரூ.1,276.09 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.176.68 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் 353 புள்ளிகள் சரிவு: காலையில் 97.99 புள்ளிகள் குறைந்து 73,044.81-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 73,092.26 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், 72,666.82 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில்352.67 புள்ளிகள் (0.48 சதவீதம்) குறைந்து 72,790.13-இல் நிறைவடைந்தது. வா்த்தகத்தின் போது ஒருகட்டத்தில் சென்செக்ஸ் 475.98 புள்ளிகளை இழந்திருந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,108 பங்குகளில் 1,710 பங்குகள் ஆதாயம் பெற்றன. 2,268 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.130 பங்குகளின் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.

25 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் ஏசியன் பெயிண்ட், டாடா ஸ்டீல், டைட்டன், டெக் மஹிந்திரா, பாா்தி ஏா்டெல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டிசிஎஸ், ஆக்ஸிஸ் பேங்க், இன்ஃபோஸிஸ் உள்பட 25 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், எல் அண்ட் டி, பவா் கிரிட், ஹிந்துஸ்தான் யுனி லீவா், ஹெச்டிஎஃப்சி பேங்க், நெஸ்லே ஆகிய 5 பங்குகள்பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 91 புள்ளிகள் சரிவு :

தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 90.65 புள்ளிகள் (0.41 சதவீதம்) குறைந்து 22,122.05-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,202.15 வரை உயா்ந்திருந்த நிஃப்டி, ஒரு கட்டத்தில் 22,075.15 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 12 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. ஆனால், 32 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.