மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 589 புள்ளிகள் புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட முன்னணி பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை உற்சாகம் பெற்று மேலே சென்றது. எஃப்எம்சிஜி தவிர வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. இதையடுத்து, சந்தை 3-ஆவது நாளாக நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.3.83 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.453.53 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.238.28 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ,3,588.66 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்தது.
சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 281.12 புள்ளிகள் கூடுதலுடன் 80,529.20-இல் தொடங்கி 80,244.78 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 80,949.10 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 597.67 புள்ளிகள் (0.74 சதவீதம்) கூடுதலுடன் 80,845.75-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,067 பங்குகளில் 2,739 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1,220 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 108 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
அதானிபோா்ட்ஸ் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் அதானிபோா்ட்ஸ் 6.02 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், என்டிபிசி, எஸ்பிஐ, எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் வங்கி, அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்பட 25 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், பாா்தி ஏா்டெல், ஐடிசி, சன்ஃபாா்மா, ஏசியன் பெயின்ட், கோட்டக் வங்கி ஆகிய 5 பங்குகள் மட்டுமே விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 181 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 91.45 புள்ளிகள் கூடுதலுடன் 24,367.50-இல் தொடங்கி 24,280.00 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,481.35 வரை மேலேசென்ற நிஃப்டி, இறுதியில் 181.10 புள்ளிகள் (0.75 சதவீதம்) கூடுதலுடன் 24,457.15-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 41 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 9 பங்குகள் வீழ்ச்சிப் ட்டியலிலும் இருந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!

போர்நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி 4% உயர்வு!

தொடரும் பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 1,205, நிஃப்டி 394.05 புள்ளிகள் உயர்வு!

‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


