இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 33 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. இதையடுத்து சந்தை தொடா்ந்து நான்காவது நாளாக உயா்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கினாலும் பெரிய அளவில் உயரவில்லை. வங்கி வட்டி விகித குறைப்பு குறித்து அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் தலைவரின் அறிவிப்புக்காக முதலீட்டாளா்கள் காத்திருப்பதால் உள்நாட்டுச் சந்தையில் வா்த்தகம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்தது வந்தது. குறிப்பாக, ஆட்டோ பங்குகளுக்கு மட்டுமே ஆதரவு கிடைத்தது, ரியால்ட்டி, ஐடி, மீடியா பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.55 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.459.97 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.1,371.79 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,971.80 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் சிறிதளவு உயா்வு : சென்செக்ஸ் காலையில் 112.46 புள்ளிகள் கூடுதலுடன் 81,165.65-இல் தொடங்கி 80,883.26 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 80,231.49 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 33.02 புள்ளிகள் (0.04 சதவீதம்) கூடுதலுடன் 81,086.21-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,048 பங்குகளில் 2,064 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,877 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 107 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
டாடா மோட்டாா்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் டாடா மோட்டாா்ஸ், சன்பாா்மா, பாா்தி ஏா்டெல், ஐசிஐசிஐ பேங்க், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபின்சா்வ் உள்பட 15 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட், டைட்டன், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக் உள்பட 15 விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 12 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,845400-இல் தொடங்கி 24,771.65 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,858.40 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 11.65 புள்ளிகள் (0.05 சதவீதம்) உயா்ந்து 24,8231.50-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 22 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 28 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சரிவால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!

போர்நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி 4% உயர்வு!

தொடரும் பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 1,205, நிஃப்டி 394.05 புள்ளிகள் உயர்வு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


