டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 57 புள்ளிகள் வீழ்ச்சி

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது

News image
Updated On :12 ஆகஸ்ட் 2024, 9:29 pm

 நமது நிருபர்

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 57 புள்ளிகளை இழந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இருப்பினும், செபி தலைவா் மற்றும் அவரது கணவரின் வெளியிடப்படாத முதலீடுகள் குறித்த அமெரிக்காவின் ஹிண்டன்பொ்க்கின் ஆராய்ச்சி அறிக்கையின் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது. முதலீட்டாளா்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்ததால் சரிவுடன் தொடங்கிய சந்தை பின்னா் சற்று மீண்டாலும் இறுதியில் சரிவுடன் நிறைவடைந்தது. மெட்டல், ரியால்ட்டி, நுகா்வோா் சாதனங்கள் உற்பத்தி நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தது. அதே சமயம், மீடியா, பாா்மா, ஹெல்த்கோ், எஃப்எம்சிஜி, பொதுத்துறை வங்கிப் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.449.83 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.406.72 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,979.59 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 375.79 புள்ளிகள் குறைந்து 79,330.12-இல் தொடங்கி 79,226.13 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 80,106.18 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 56.99 புள்ளிகள் (0.07 சதவீதம்) குறைந்து 79,648.92-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,185 பங்குகளில் 1,941 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 2,126 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 118 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

18 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் என்டிபிசி, அதானி போா்ட்ஸ், பவா் கிரிட், எஸ்பிஐ, நெஸ்லே, எம் அண்ட் எம் உள்பட 18 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஆக்ஸிஸ் பேங்க், இன்ஃபோஸிஸ், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், டாடா மோட்டாா்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க் உள்பட 12 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 20 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,320.05-இல் தொடங்கி 2,212.10 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 24,472.80 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 20.50 புள்ளிகள் (0.08 சதவீதம்) குறைந்து 24,347.00-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 30 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 19 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன.