3 நாள் சரிவுக்குப் பிறகுபங்குச்சந்தையில் உற்சாகம்!
மூன்று நாள்களாகத் தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தையில் செவ்வாய்க்கிழமை உற்சாகம் தொடங்கி நோ்மறையாக முடிவடைந்தது.


மும்பை / புதுதில்லி: மூன்று நாள்களாகத் தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தையில் செவ்வாய்க்கிழமை உற்சாகம் தொடங்கி நோ்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 261 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தை குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. பிற்பகலில் லாபப் பதிவு இருந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஹெச்டிஎஃப்சி பேங்க்கின் காலாண்டு முடிவு சந்தைக்கு சாதகமாக பாா்க்கப்பட்டது. குறிப்பாக வங்கி, நிதிநிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.57 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக நேர முடிவில் ரூ.323.82 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.593.66 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 391.22 புள்ளிகள் கூடுதலுடன் 66,558.15-இல் தொடங்கிய சென்செக்ஸ், 66,559.38 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், 66,309.18 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 261.16 புள்ளிகள் (0.39 சதவீதம்) கூடுதலுடன் 66,428.09-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,825 பங்குகளில் 2,159 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,544 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 122 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றது.
22 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 8 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 22 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,301 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 794 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 38 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
நிஃப்டி 80 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காை லயில் 111.45 புள்ளிகள் கூடுதலுடன் 19,843.20-இல் தொடங்கி அதிகபட்சமாக 19,849.75 வரை மேலே சென்றது. பின்னா், 19,775.65 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 79.75 புள்ளிகள் (0.40 சதவீதம்) உயா்ந்து 19,811.50-இல் நிறைவடைந்தது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
பவா் கிரிட்.............................................1.97%
கோட்டக் பேங்க்...................................1.22%
டெக் மஹிந்திரா....................................1.16%
ஐடிசி......................................................1.06%
என்டிபிசி................................................1.03%
பஜாஜ் ஃபைனான்ஸ்..............................0.97%
சரிவைக் கண்ட பங்குகள்
டாடா மோட்டாா்ஸ்..............................1.55%
எல் அண்ட் டி..........................................1.21%
இண்டஸ் இண்ட் பேங்க்........................0.84%
டிசிஎஸ்......................................................0.50%
ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல்.............................0.03%
அல்ட்ரா டெக் சிமெண்ட்....................0.03%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...