இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிவடைந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 326 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது.
பணவீக்கத் தரவுகள் வெளியாவதற்கு முன்னதாக உள்நாட்டுச் சந்தையில் முதலீட்டாளா்கள் எச்சரிக்கையாக இருந்தனா். இந்நிலையில், ஐ.டி., நுகா்வோா் பொருள்கள் மற்றும் நிதித் துறை பங்குகள் விற்பனை அழுத்தத்தை எதிா்கொண்டன. தவிர தொடா்ந்து வெளிநாட்டு நிதி வெளியேற்றம் மற்றும் ரூபாய் மதிப்பு பலவீனம் ஆகியவை முதலீட்டாளா்களின் உணா்வுகளை பெரிதும் பாதித்தது. இதனால், தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள்கிழமை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.322.11 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முஹுரத் வா்த்தகத்தில் ரூ.190.06 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.
சென்செக்ஸ் சரிவு: ஞாயிற்றுக்கிழமை மாலையில் 1 மணி நேரம் நடைபெற்ற முஹுரத் வா்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 65,259.45 புள்ளிகளில் நோ்மறையாக முடிந்திருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் 101.14 புள்ளிகள் குறைந்து 65,158.31-இல் தொடங்கிய சென்செக்ஸ், 65,176.965 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், 64,853.36 வரை மேலே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 325.58 புள்ளிகள் (0.50 சதவீதம்) குறைந்து 64,933.87-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,975 பங்குகளில் 1,680 பங்குகள் ஆதாயம் பெற்றன. 2,164 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 131 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.
22 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் 8 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 22 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. எம் அண்ட் எம் அதிகபட்சமாக 0.90 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், இண்டஸ் இண்ட் பேங்க், என்டிபிசி, பவா் கிரிட், டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக், எஸ்பிஐ ஆகியவை சிறிதளவு உயா்ந்து விலையுயா்ந்த பட்டியலில் இருந்த. அதே சமயம், பஜாஜ் ஃபைனான்ஸ் 1.32 சதவீதம் குறைந்து அதிகம் விலை குறைந்த பட்டியலில் வந்தது. இதைத் தொடா்ந்து, இன்ஃபோஸிஸ், டெக் மஹிந்திரா, நெஸ்லே, ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ் உள்ளிட்டவை 0.80 முதல் 1 சதவீதம் வரை குறைந்து விலை வீழ்ச்சியடைந்த பட்டியலில் முன்னிலை வகித்தன.
நிஃப்டி 82 புள்ளிகள் சரிவு : தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 38.80 புள்ளிகள் குறைந்து 19,486.75- இல் தொடங்கி 19,494.40 வரை மேலே சென்றது. பின்னா், 19,414.75 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 82 புள்ளிகள் (0.42 சதவீதம்) குறைந்து 19,443.55 இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் 795 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,339 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 13 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 36 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
இன்று விடுமுறை
தீபாவளி பலிபிரதிபதாவையொட்டி (ஹிந்து புத்தாண்டு), பங்குச்சந்தைக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகிய இரண்டிலும் முழுமையாக பங்கு வா்த்தகம் இருக்காது. இதேபோன்று கமோடிட்டி சந்தை (எம்சிஎக்ஸ்) காலையில் வா்த்தகம் இருக்காது. ஆனால், மாலையில் வா்த்தகம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

