தள்ளாட்டத்துக்கிடையே சென்செக்ஸ் ஏற்றத்தில் முடிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை தள்ளாட்டத்தில் இருந்து வந்தாலும்,


இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை தள்ளாட்டத்தில் இருந்து வந்தாலும், இறுதியில் நேர்மறையாக முடிவடைந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 33 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.
ஆசியா, ஐரோப்பா உள்பட உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருவது உள்நாட்டுச் சந்தையில் முதலீட்டாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், புதன்கிழமை காலையில் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கினாலும் அதன் பிறகு எதிர்மறையாகச் சென்றது. பொதுத்துறை - தனியார் வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஐடி, மீடியா பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன. ஆனால், ஃபார்மா, ஹெல்த்கேர், ரியால்ட்டி , ஆட்டோ, எஃப்எம்சிஜி பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது. இதனால் சந்தை நேர்மறையாக முடிவடைந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயர்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1.49 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.320.50 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ரூ.497.21 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனர்.
சென்செக்ஸ் ஏற்றம்: காலையில் 159.55 புள்ளிகள் கூடுதலுடன் 65,101.95-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 65,124.00 வரை மேலே சென்றது. பின்னர், 64,851.06 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 33.21 புள்ளிகள் (0.05 சதவீதம்) உயர்ந்து 64,975.61-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,828 பங்குகளில் 2,019 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,683 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 126 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன. சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
நிஃப்டி 37 புள்ளிகள் முன்னேற்றம் : தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 42.90 புள்ளிகள் கூடுதலுடன் 19,449.60- இல் தொடங்கி அதிகபட்சமாக 19,464.40 வரை மேலே சென்றது. பின்னர், 19,401.50 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 36.80 புள்ளிகள் (0.19 சதவீதம்) உயர்ந்து 19,443.50-இல் நிறைவடைந்தது.
தேசிய பங்குச்சந்தையில் 1,167 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 945 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 29 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 21 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
ஏசியன் பெயின்ட் 1.96%
டைட்டன் 1.24%
எல் அண்ட் டி 1.16%
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் 1.16%
ஐடிசி 0.96%
சரிவைச் சந்தித்த பங்குகள்
ஐசிஐசிஐ வங்கி 1.44%
என்டிபிசி 1.05%
இன்ஃபோசிஸ் 0.87%
டெக் மஹிந்திரா 0.76%
டாடா ஸ்டீல் 0.58%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...