பங்குச் சந்தை தொடர்ந்து 3-ஆவது வர்த்தக தினமாக புதன்கிழமையும் நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 124 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 42.95 புள்ளிகள் (0.24 சதவீதம்) உயர்ந்து 17,754.40-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிர்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் காலையில் எதிரொலித்தது. இருப்பினும், பிற்பகல் வர்த்தகத்தின் போது வங்கி, நிதி நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு ஓரளவுஆதரவு கிடைத்தது.
ஆனால், ஃபார்மா, ஐடி, ரியால்ட்டி பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன. மேலும், முன்பேர வர்த்தகத்தில் வாராந்திர கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக இருப்பதால், ஏற்கெனவே விற்றிருந்தவர்கள் பங்குகளை வாங்கி கணக்கை சரி செய்ய முற்பட்டனர். இதனால், இறுதியில் சந்தை நேர்மறையாக முடிவடைந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயர்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.81 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.266.24 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) கடந்த திங்கள்கிழமை ரூ.721.37 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஒரு நாள் ஹோலி விடுமுறைக்குப் பிறகு புதன்கிழமை காலையில் சென்செக்ஸ் 308.36 புள்ளிகள் குறைந்து 59,916.10-இல் தொடங்கி 59,844.82 வரை கீழே சென்றது.
பின்னர், பிற்பகல் வர்த்தத்தின் போது, அதிகபட்சமாக 60,402.85 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 123.63 புள்ளிகள் (0.21 சதவீதம்) உயர்ந்து 60,348.09-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 13 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 17 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன.
இண்டஸ்இண்ட் வங்கி அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பிரபல தனியார் வங்கியான இண்டஸ்இண்ட் வங்கி 4.75 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எம் அண்ட் எம், எல் அண்ட் டி, என்டிபிசி, ஐடிசி உள்ளிட்டவை 1 முதல் 1.60 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், அல்ட்ரா டெக், டாடா ஸ்டீல், மாருதி சுஸýகி, எஸ்பிஐ, டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, பவர் கிரிட் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
பஜாஜ் ஃபைனான்ஸ் சரிவு: அதே சமயம், பிரபல தனியார் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் 2.30 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், டெக் மஹிந்திரா, இன்ஃபோஸிஸ், சன்பார்மா, கோட்டக் வங்கி, ஹெச்சிஎல் டெக், விப்ரோ, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின் சர்வ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவு

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


