இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 37 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 0.25 புள்ளிகள் மட்டுமே குறைந்து 18,118.30-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நேர்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உயர்ந்தே தொடங்கியது. அதன்பிறகு லாபப் பதிவு காரணமாக தள்ளாட்டம் கண்டது. தொடர்ந்து பங்குகள் விற்பனை அதிகரித்ததால், ஒரு கட்டத்தில் எதிர்மறையாகச் சென்றது. இருப்பினும், வர்த்தக நேர முடிவில் கிடைத்த சிறிதளவு ஆதரவால் சந்தை பெரிய அளவில் மாற்றமின்றி நிலை கொண்டது. பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி, பார்மா பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்தன. அதே சமயம், ஆட்டோ, ஐடி பங்குளுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பெரும் சரிவு தவிர்க்கப்பட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சென்செக்ஸ் சிறிதளவு முன்னேற்றம்:
சென்செக்ஸ் காலையில் 180.53 புள்ளிகள் கூடுதலுடன் 61,122.020-இல் தொடங்கி, அதிகபட்சமாக 61,266.06 வரை மேலே சென்றது. பின்னர், 60,849.12 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 37.08 புள்ளிகள் (0.06 சதவீதம்) கூடுதலுடன் 60,978.75-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
டாடா மோட்டார்ஸ், மாருதி அபாரம்:
பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் 3.34 சதவீதம், மாருதி சுஸுகி 3.21 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன.
ஆக்ஸிஸ் பேங்க் சரிவு: அதே சமயம், பிரபல தனியார் வங்கியான ஆக்ஸிஸ் பேங்க் 2.50 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது.
சந்தை மதிப்பு சரிவு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.67 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ. 280.20 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) திங்கள்கிழமை ரூ.219.87 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


