ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தள்ளாட்டத்துக்கிடையே சென்செக்ஸ் 44 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தை வியாழக்கிழமை உச்சத்தில் தொடங்கி காலையில் பெற்ற லாபத்தின் பெரும்பகுதியை இழந்தாலும் இறுதியில் நேர்மறையாக முடிவடைந்தது.

News image

கோப்புப் படம்

Updated On :16 பிப்ரவரி 2023, 9:15 pm

பங்குச் சந்தை வியாழக்கிழமை உச்சத்தில் தொடங்கி காலையில் பெற்ற லாபத்தின் பெரும்பகுதியை இழந்தாலும் இறுதியில் நேர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 44 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 20.00 புள்ளிகள் (0.11 சதவீதம்) உயர்ந்து 18,035.85-இல் நிலைபெற்றது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் ஓரளவு சாதகமாக இருந்தன. இதன் தாக்கத்தால், உள்நாட்டுச் சந்தை உச்சத்தில் தொடங்கியது. இருப்பினும், வர்த்தக நேர முடிவில் பங்குகள் விற்பனை அதிகரித்ததால், காலையில் பெற்ற லாபத்தில் பெரும் பகுதியை இழக்க நேரிட்டது. வர்த்தகத்தின் போது, ஒரு கட்டத்தில் சந்தை எதிர்மறையாகச் சென்றது. குறிப்பாக, ஐடி, மெட்டல், ரியால்ட்டி, ஹெல்த்கேர், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் ஆதாயம் பெற்றன. அதே சமயம், ஆட்டோ, வங்கித் துறை, ஃபைனான்ஸ் குறியீடுகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு புதன்கிழமை ரூ.1.06 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.268.31 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.432.15 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 291.13 புள்ளிகள் கூடுதலுடன் 61,566.225-இல் தொடங்கி 61,682.25 வரை மேலே சென்றது. பின்னர். 61,196.72 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 44.42 புள்ளிகள் (0.07 சதவீதம்) கூடுதலுடன் 61,319.51-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
 டெக் மஹிந்திரா அபாரம்: பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டெக் மஹிந்திரா இரண்டாவது நாளாக 5.58 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, நெஸ்லே, டாடா ஸ்டீல், என்டிபிசி, டிசிஎஸ் உள்ளிட்டவை 1 முதல் 1.65 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், ஏசியன் பெயின்ட், விப்ரோ, இன்ஃபோசிஸ், கோட்டக் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
 ஹெச்யுஎல் சரிவு: அதே சமயம், பிரபல முன்னணி நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் (ஹெச்யுஎல்) இரண்டாவது நாளாக 0.86 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவை 0.50 முதல் 0.80 சதவீதம் குறைந்தன. மேலும், மாருதி, ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, இண்டஸ்இண்ட் வங்கி, ரிலையன்ஸ் உள்ளிட்டவை சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.