கடந்த இரண்டு நாள்களாக இறங்குமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை நேர்மறையாக முடிந்தது.
இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 158.95 புள்ளிகள் (0.89 சதவீதம்) உயர்ந்து 17,929.85-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நேர்மறையாக இருந்ததன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. குறிப்பாக சென்செக்ஸ் பட்டியலில் அதிகத் திறன் கொண்ட ரிலையன்ஸ், ஐடிசி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மேலும், ஐடி, வங்கிப் பங்குகளுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. இவை சந்தை வலுப்பெற உதவியது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு திங்கள்கிழமை ரூ.22 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.265.99 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) திங்கள்கிழமை ரூ.1,322.39 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 118.41 புள்ளிகள் கூடுதலுடன் 60,550.25-இல் தொடங்கி அதற்கு கீழே செல்லவில்லை. அதிகபட்சமாக 61,102.74 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 600.42 புள்ளிகள் (0.99 சதவீதம்) கூடுதலுடன் 61,032.26-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 11 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 19 பங்குகள் ஆதாயம் பெற்றன.
ஐடிசி, ரிலையன்ஸ் முன்னேற்றம்: பிரபல நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி 3.31 சதவீதம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் 2.35 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, விப்ரோ, ஹெச்சிஎல் டெக், பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா உள்ளிட்டவை 1 முதல் 1.85 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயர்ந்த பட்டியலில் இருந்தன.
என்டிபிசி சரிவு: அதே சமயம், பிரபல முன்னணி பொதுத் துறை மின் நிறுவனமான என்டிபிசி 1.10 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, சன்ஃபார்மா, எல் அண்ட் டி, அல்ட்ராடெக் சிமென்ட், டைட்டன், ஏசியன் பெயின்ட், மாருதி உள்ளிட்டவை 0.50 முதல் 0.90 சதவீதம் வரை குறைந்தன. மேலும், கோட்டக் வங்கி, டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊத்துமலையில் பால் வியாபாரி கொலை

பெண் தவெக நிா்வாகி மீது அவதூறு - தகராறு புதிய தமிழகம் கட்சியினா் மீது வழக்கு!

இன்று குஜராத்துடன் மோதும் சென்னை

சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


