பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

உரங்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி: தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு

ஜிஎஸ்டி அமலாகும் போது உரங்கள் மீதான வரி ரத்து செய்யப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு மாறாக 5 சதவீத வரி விதிப்பால் ரூ.11 முதல் ரூ.75 வரை விலை உயர்ந்துள்ளதால் அதிருப்தி

News image
Updated On :22 ஜூலை 2025, 9:31 am

ஆ. நங்கையார் மணி

ஜிஎஸ்டி அமலாகும் போது உரங்கள் மீதான வரி ரத்து செய்யப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு மாறாக 5 சதவீத வரி விதிப்பால் ரூ.11 முதல் ரூ.75 வரை விலை உயர்ந்துள்ளதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஜிஎஸ்டி என்ற மூன்றெழுத்து, கடந்த ஒரு மாத காலமாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி கோலாகலமாக அமலுக்கு வந்துவிட்டது. 25 வகையான வரிகள் மாநிலத்திற்கு மாநிலம் சிறு வேறுபாடுகளுடன் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், ஜிஎஸ்டி என்ற குடையின் கீழ் ஒரே வரியாக செலுத்துவதில் பெருநிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.
ஆனால், நாட்டின் முதுகெலும்பாக உள்ள வேளாண் தொழில், கிராமத் தொழில், குடிசைத் தொழில் போன்றவற்றில் ஈடுபடுவோரிடம், ஜிஎஸ்டி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வேளாண்மைத் தொழிலுக்கு பிரதானத் தேவையாக உள்ள உரங்களுக்கு 5 சதவீத வரி விதிப்பு என்பது விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
ஏற்கெனவே உரங்கள் மீது 1 சதவீத சேவை வரி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்தில் மட்டும் அந்த வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஜிஎஸ்டியில் உரங்களுக்கு 12 சதவீதம், பூச்சி மருந்துகளுக்கு 18 சதவீதம் என வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தற்போது உரங்களுக்கான ஜிஎஸ்டி மட்டும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க திண்டுக்கல் மாவட்டச் செயலர் இரா.சச்சிதானந்தம் கூறுகையில், தமிழகம் மட்டுமின்றி, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா, ஒடிசா, மத்திய பிரதேசம் என 7 மாநிலங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. இதன் காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வேளாண்மைக்கு பயன்படுத்தக் கூடிய அனைத்து வகையான இடுபொருள்களுக்கும் விலக்கு அளித்திருக்க வேண்டும்.
ஏற்கெனவே உரத்திற்கு 12 சதவீதம், பூச்சி மருந்துக்கு 18 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டிருந்த வரி விகிதம், தற்போது உரங்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி 5ஆக குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனாலும் தமிழகத்தை பொருத்தவரை விவசாயிகளின் நலன் கருதி 1 சதவீத வாட் வரிக்கு கூட விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது 5 சதவீத வரி என்பது நெருக்கடியில் தவித்து வரும் விவசாயிகளுக்கு பெரும் சுமையாகவே அமைந்துள்ளது என்றார்.

சரக்கு மற்றும் சேவை வரியினால் (5 சதவீதம்) 50 கிலோ உர மூட்டைகளுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ள விலை விவரம்: (பழைய விலை அடைப்புக் குறிக்குள்). தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் உர நிறுவனங்கள் பட்டியல் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

ஸ்பிக்
யூரியா 295(284)
டிஏபி 1165.50(1090)
காம்ப்ளக்ஸ்
20:20:0:13 897.50(840)
காம்ப்ளக்ஸ்
10:26:26 1081.50(1025)
சூப்பர் 378(360)
இஃப்கோ
யூரியா 295(294)
டிஏபி 1076(1035)
காம்ப்ளக்ஸ்
20:20:0:13 850(825)
காம்ப்ளக்ஸ்
10:26:26 1055(1030)
ஃபேக்ட்
காம்ப்ளக்ஸ்
20:20:0:13 903(889)
காம்ப்ளக்ஸ்
20:20:0:13:03 929(914)
அமோனியம்
சல்பேட் 675.50(650) பொட்டாஷ் 571.60(550).
எம்எப்எல்
யூரியா 295.10(284.10)
காம்ப்ளக்ஸ்
17:17:17 989.50(52)
ஐபிஎல்
டிஏபி 1086(1035)
பொட்டாஷ் 580(530)
காம்ப்ளக்ஸ்
20:20:0:13 865(825)
காம்ப்ளக்ஸ்
16:16:16 892(850.15)
காம்ப்ளக்ஸ்
15:15:15:09 890(840)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.