அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.500 கோடிக்கும் மேல் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் யு.யு.லலித், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டில், வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட ரூ. 40 ஆயிரம் கோடி கடன், வராக்கடன்களாக மாற்றப்பட்டது. விசாரணையின் போது இதற்கான ஆவணங்களை மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் சமர்ப்பித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
வாராக்கடன்களால் நாட்டில் பெரும்பாலான வங்கிகள் பாதிக்கப்பட்டு வருவது மிகவும் வேதனைக்குரியது. இத்தனைப் பெரிய தொகைகளை எந்த விதிமுறைகளின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்குகின்றன எனத் தெரியவில்லை. இதுபோன்ற பெரிய கடன்தொகைகளைத் திரும்பப் பெறுவதற்கு போதுமான வழிமுறைகள் இருக்கிறதா?
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து ரூ.500 கோடிக்கும் மேல் கடன் பெற்று அதனைத் திருப்பி செலுத்தாத நிறுவனங்களின் பட்டியலை ஆறு வாரங்களுக்குள் ரிசர்வ் வங்கி சமர்ப்பிக்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,330.8 கோடி டாலராக உயர்வு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


