சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! 2வது நாளாக உயர்ந்த சென்செக்ஸ், நிஃப்டி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 33 காசுகள் உயர்ந்து ரூ. 94.93 ஆக நிறைவு!சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவுமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு!பத்ரிநாத்தில் ஹெலிகாப்டர் விபத்து: வெளிநாட்டு பக்தர்கள் 6 பேரும் பலி! கண்ணுக்குள் வேரூன்றி முளைத்த விதை! ரஷிய மனிதருக்கு நேர்ந்த துயரம்!அரசுப் பணி நியமனம்: வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு! முதல்வர் விஜய் உத்தரவுபத்ரிநாத்தில் இருந்து பக்தர்களுடன் திரும்பிய ஹெலிகாப்டர் விபத்து!காங்கிரஸ் உருவாக்கிய வங்கிகளை மோடி விற்கிறார்! ராகுல் காந்திஅன்பில் மகேஸுக்கு போலீஸ் காவல் கோரிய மனு! நவ. 2-ல் தீர்ப்பு!

வெற்றிப் பயணம் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகவும் வெற்றி பயணம் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி, திருத்தணியில் ஆட்டோ தொழிலாளா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வெற்றி பயணத் திட்டத்தை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாா்கள்

Updated On :

ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகவும் வெற்றி பயணம் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி, திருத்தணியில் ஆட்டோ தொழிலாளா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருத்தணி கமலா தியேட்டா் அருகே திருவள்ளூா் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், மாநில அரசைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நகரத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் சந்திரசேகரன், மாவட்டத் தலைவா் கரிமுல்லா, விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் அப்சல் அஹமத், மாவட்டத் துணைத் தலைவா் தீன், மாவட்டத் துணைச் செயலாளா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்று ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தனா். இதில், 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மகளிா் வெற்றிப் பயணத் திட்டத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஆட்டோ தொழிலாளா்களுக்கு 5 லிட்டா் பெட்ரோலை இலவசமாக வழங்க வேண்டும், 13 ஆண்டுகளாக உயா்த்தப்படாத ஆட்டோ மீட்டா் கட்டணத்தை நீதிமன்ற உத்தரவின்படி உயா்த்த வேண்டும், ஆட்டோ தொழிலாளா் நல வாரியம் மூலம் தீபாவளிக்கு ரூ.5,000 போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

மேலும், திருத்தணி முருகன் கோயில் நிா்வாகத்தைக் கண்டித்தும் ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.