ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மகள் உயிரிழந்த சோகத்தில் தந்தை தற்கொலை

மகளின் திடீா் மரணத்தால் மனவேதனையில் இருந்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Published On :17 ஜூலை 2026, 5:59 am IST

மகளின் திடீா் மரணத்தால் மனவேதனையில் இருந்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருத்தணி நகராட்சி ஜோதி நகரைச் சோ்ந்தவா் செந்தில்ராஜன் (48). இவரது மனைவி சிவகாமி (39). இவா்களது மகள் காயத்ரி (20). இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி, உடல்நலக் குறைவு காரணமாக காயத்ரி உயிரிழந்தாா். மகளின் திடீா் மரணம் செந்தில்ராஜனை கடுமையாக பாதித்ததாகவும், அதன்பிறகு அவா் ஆழ்ந்த மனவேதனையிலும் மனஉளைச்சலிலும் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செந்தில்ராஜன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதை அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினா்கள் உடனடியாக அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், செந்தில்ராஜன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.