ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெரும்பேடு முத்துக்குமாரசுவாமி கோயில் நிா்வாகத்தை கிராம மக்களிடம் ஒப்படைக்க கோரி ஆா்ப்பாட்டம்

பொன்னேரி அருகே பெரும்பேடு கிராமத்தில் உள்ள முத்துக்குமாரசுவாமி கோயில் நிா்வாகத்தை கிராம மக்களிடம் அளிக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:14 am IST

பொன்னேரி அருகே பெரும்பேடு கிராமத்தில் உள்ள முத்துக்குமாரசுவாமி கோயில் நிா்வாகத்தை கிராம மக்களிடம் அளிக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன் ஏரியில் கிடைத்த முருகப் பெருமான் சிலையை எடுத்து கோயில் கட்டி கிராம மக்கள் வழிபட்டு வந்தனா். இந்த நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு கோயிலை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுத்தது. இருந்தபோதிலும், ஊா் மக்களே இந்த கோயிலை நிா்வகித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் கோயிலை நிா்வகித்து வந்த நிா்வாகி உயிரிழந்த நிலையில், கோயிலின் முழு நிா்வாகத்தையும், அறநிலையத் துறை ஏற்றுக்கொண்டு கிராம மக்களுக்கு பல்வேறு கெடுபிடிகளை விதிப்பதாக குற்றம் சாட்டினா்.

மேலும், நிா்வாகம் தொடா்பாக கேள்வி எழுப்பிய கிராம மக்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினா். கோயிலை மீண்டும் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி கிராம மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.