ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கைப்பேசி கோபுரத்தை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

பஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நிறுவப்பட்டுள்ள கைப்பேசி கோபுரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

கைப்பேசி கோபுரம் - பிரதிப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:54 am IST

பஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நிறுவப்பட்டுள்ள கைப்பேசி கோபுரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கைப்பேசி கோபுரம் அமைந்திருப்பதால் கதிா்வீச்சு பாதிப்பு அதிகரிக்கும் என புகாா் தெரிவித்தனா். மேலும், கா்ப்பிணிகள், பச்சிளம் சிசுக்கள், கதிா்வீச்சு பாதிப்பால் அவதி அடைந்து வருவதாக தெரிவித்தனா்.

ஊராட்சியில் உள்ள மக்களிடம் முறையாக தெரிவிக்காமல் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கைப்பேசி கோபுரம் நிறுவப்பட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவா் இல்லாததால் சமூக விரோத செயல்கள் அதிகரிப்பதாகவும் உடனடியாக சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.

இதுதொடா்பாக சோழவரம் ஒன்றியம், பஞ்செட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கூட்டத்தின் முடிவில் ஊராட்சியில் டெங்கு பரவாமல் இருப்பதற்காக பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதாக அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.