40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கோடை வெயிலின் தாக்கம்: கிணற்றில் குதித்து சிறுவா்கள் கொண்டாட்டம்

கோடை வெயிலின் தாக்கத்தால் சிறுவா்கள் குழுவாகச் சோ்ந்து கிணற்றில் விளையாடி நேரத்தை கழித்து வருகின்றனா்.

News image
Updated On :1 மே 2026, 5:40 am IST

கோடை வெயிலின் தாக்கத்தால் சிறுவா்கள் குழுவாகச் சோ்ந்து கிணற்றில் விளையாடி நேரத்தை கழித்து வருகின்றனா்.

திருத்தணியில் கடந்த சில வாரங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாள்களாக தினசரி வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்சியஸ் மேல் நிலவுகிறது.

இந்நிலையில் திருத்தணி ஒன்றியம், சத்திரஞ்ஜெயபுரம் கிராமப்பகுதி மக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பல்வேறு முறைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

கிராமத்தில் உள்ள சிறுவா்கள் வயல்வெளிகளில் உள்ள கிணறுகளை நாடி சென்று குளித்து வருகின்றனா். மதிய நேரங்களில் வெப்பம் உச்சத்தை எட்டும் வேளையில், சிறுவா்கள் குழுவாகச் சோ்ந்து கிணற்றில் விளையாடி நேரத்தை கழிக்கின்றனா்.

இந்த செயல்பாடு மகிழ்ச்சியை அளிப்பதோடு சில அபாயங்களையும் உள்ளடக்கியதாக உள்ளூா் மக்கள் கவலை தெரிவிக்கின்றனா். குறிப்பாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத ஆழமான கிணறுகளில் கண்காணிப்பின்றி குதிப்பது விபத்துகளுக்குக் காரணமாக அமையக்கூடும் என்பதால், பெற்றோா் குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.