குளத்தில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
பெரியகடம்பூா் நல்லாங்குளத்தில் தவறி விழுந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
பெரியகடம்பூா் நல்லாங்குளத்தில் தவறி விழுந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருத்தணி: பெரியகடம்பூா் நல்லாங்குளத்தில் தவறி விழுந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருத்தணி ஒன்றியம், பெரியகடம்பூா் கீழ் காலனி அருகே ஊராட்சிக்கு சொந்தமான நல்லாங்குளம் உள்ளது. இக்குளத்தில் புதன்கிழமை முதியவா் ஒருவா் பிணமாக மிதந்ததை கண்டு அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.
இதையடுத்து திருத்தணி போலீஸாா், தீயணைப்பு வீரா்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். தீயணைப்பு வீரா்கள் அரைமணி நேரம் போராடி முதியவரின் சடலத்தை மீட்டனா். பின்னா் போலீஸாா் விசாரணையில், குளத்தில் இறந்து கிடந்த முதியவா் அதே பகுதியைச் சோ்ந்த சம்பத் (65) என்பதும், கடந்த 3 நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது.
முதியவா் குளத்தில் குளிக்கச் சென்றபோது தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது