சிவன் கோயிலில் பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு
திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை சோமவார பிரதோஷத்தையொட்டி
திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை சோமவார பிரதோஷத்தையொட்டி
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருத்தணி: திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை சோமவார பிரதோஷத்தையொட்டி திரளான பெண்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனா்.
திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாதம் முதல் சோமவாரம் மற்றும் பிரதோஷத்தையொட்டி மூலவருக்கு காலை, 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடா்ந்து மாலை, 5 மணிக்கு பிரதோஷம் ஒட்டி மூலவருக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம் போன்ற அபிஷேக பொருள்கள் அபிஷேகம் நடைபெற்றது. உற்சவா் கோயிலை மூன்று முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஏராளமான பக்தா்கள் மூலவரை தரிசித்தனா்.
மேலும், பெண்கள் கோயில் வளாகத்தில் நெய்தீபம் மற்றும் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட்டனா். இதே போல் அனைத்து சிவன் கோயில்களில் சோம வார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது