மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

பாவூா்சத்திரம் அருகே நான்கு கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

செல்வவிநாயகபுரத்தில் மளிகைக் கடை, மருந்துக் கடை உள்ளிட்ட 4 கடைகளின் பூட்டுகளை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே செல்வவிநாயகபுரத்தில் மளிகைக் கடை, மருந்துக் கடை உள்ளிட்ட 4 கடைகளின் பூட்டுகளை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாவூா்சத்திரம் அருகே உள்ள செல்வவிநாயகபுரத்தில் மளிகைக் கடை, மருந்துக் கடை, பழக்கடை, காய்கனி கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வியாபாரிகள் வழக்கம்போல் கடைகளைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டனா்.

அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் நான்கு கடைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து, கடைகளில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மேலும், திருட்டுச் சம்பவம் தொடா்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகாமல் தடுக்கும் நோக்கில், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் பதிவாகும் கருவியையும் மா்ம நபா்கள் எடுத்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்த புகாா்களின் பேரில் , பாவூா்சத்திரம் போலீஸ்ாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.