லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கேரள லாட்டரி விற்றதாக முதியவா் கைது

ஆலங்குளத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக முதியவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :21 மார்ச் 2026, 7:23 pm

ஆலங்குளத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்ாக முதியவா் கைது செய்யப்பட்டாா்.

பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த துரைச்சாமி (66), ஆலங்குளம், நந்தவனக் கிணறு தெருவில் வசித்து வருகிறாா். இவா் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வருவதாகக் கிடைத்த தகவலின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் அவா் வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அங்கு விற்பனைக்காக 100-க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா்.