ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயிலை தினசரி இயக்க ரயில்வே அமைச்சகம் பரிசீலனை

தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயிலை தினசரி இயக்க ரயில்வே அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்தாா்.

Published On :24 ஜூலை 2026, 7:27 am IST

தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயிலை தினசரி இயக்க ரயில்வே அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை: பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்திற்கு கூடுதல் ரயில் நிறுத்தங்கள் வழங்க வேண்டும். தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்திருந்தேன்.

மத்திய ரயில்வே அமைச்சகம் அதற்கு அனுப்பியுள்ள பதிலில், தற்போது வாராந்திர சேவையாக இயக்கப்படும் (எண்: 20683/20684) தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு ரயிலை தினசரி சேவையாக இயக்குவது குறித்தும், எா்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயில் மற்றும் மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயிலுக்கு பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்குவது குறித்தும் பரிசீலித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.