ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆலங்குளம் அருகே இளம்பெண் தற்கொலை

Suicide

தற்கொலை - தினமணி

Published On :21 ஜூலை 2026, 3:22 am IST

ஆலங்குளம் அருகே திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூா் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரூபன் (27). பூச்சிக் கொல்லி மருந்து கம்பெனியில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி ஜாய்ஸ் (24).இவா்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. கணவன்- மனைவி இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இந்நிலையில் திங்கள்கிழமை ரூபன் வேலைக்கு சென்ற பின்னா், வீட்டில் தனியாக இருந்த ஜாய்ஸ் சேலையால் தூக்கிட்டுக் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இத்தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்தனா். தென்காசி கோட்டாட்சியா் வைஷ்ணவி பால் விசாரணை நடத்துகின்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.