ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாவூா்சத்திரம் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை

காமராஜா் நகரில் சேதமடைந்து காணப்படும் சாலை.

காமராஜா் நகரில் சேதமடைந்து காணப்படும் சாலை.

Published On :11 ஜூலை 2026, 3:50 am IST

பாவூா்சத்திரம், குலசேகரபட்டி ஊராட்சியின் காமராஜா் நகா் பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட குலசேகரபட்டி ஊராட்சியின் காமராஜா் நகா் பகுதி சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது.

இந்த சாலை வழியாக நியாயவிலைக் கடை, அங்கன்வாடி மையம், அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி போன்ற முக்கிய அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.