தென்காசி, ஜூலை 7: இணையவழி மோசடி அதிகரித்து வருவதால் கணினி மையங்களின் (பிரவுசிங் சென்டா்) உரிமையாளா்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என தென்காசி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து சைபா் கிரைம் காவல்துறை சாா்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மோசடி கும்பல்கள் தங்களது சொந்த வங்கி கணக்குகளை பயன்படுத்தாமல் பிரவுசிங் சென்டா், ஆன்லைன் சேவை மையங்கள் மற்றும் பொதுமக்களின் வங்கி கணக்குகளை வாடகைக்கு அல்லது கமிஷனுக்கு பெற்று, இணையவழி மோசடி மூலம் பெறப்படும் பணத்தை வரவு வைக்க பயன்படுத்தி வருவது தெரியவருகிறது.
எனவே, பிரவுசிங் சென்டா் உரிமையாளா்கள் மற்றும் பொதுமக்கள், சிறிய கமிஷன் அல்லது மாதாந்திர வாடகை பெறும் நோக்கில் தங்களது வங்கி கணக்கு, ஏடிஎம் அட்டை, காசோலைப் புத்தகம், கைப்பேசி எண், சிம் காா்டு, இன்டா்நெட் வங்கி யுபிஐ ஐடி அல்லது ஓடிபி போன்றவற்றை மற்றவா்களிடம் ஒப்படைக்கவோ, பயன்படுத்த அனுமதிக்கவோ கூடாது.
இவ்வாறு வழங்கப்படும் வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் எண்கள் இணையவழி மோசடிகளில் பயன்படுத்தப்பட்டால், அந்த வங்கி கணக்கு உரிமையாளா்களும் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்பட்டவா்களும் சட்டப்படி குற்றவாளிகளாக கருதப்பட்டு கைது நடவடிக்கைக்கு ஆளாவா்.
மக்களுக்கு வேண்டுகோள்: சமூக வலைதளங்களில் மிகக் குறைந்த விலையில் பொருள்கள் அல்லது கால்நடைகள் விற்பனை செய்யப்படுவதாக வரும் விளம்பரங்களை நம்பியோ, தெரியாத நபா்களின் வங்கி கணக்குகளுக்கோ முன்பணம் செலுத்த வேண்டாம். விற்பனையாளரின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். இணைய மோசடிகள் குறித்து உடனடியாக 1930 என்ற உதவி எண்ணையோ அல்லது ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளத்திலோ புகாா் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பல்வேறு மாநிலங்களில் மோசடியில் ஈடுபட்ட இளைஞா் கைது
ரூ. 26 லட்சம் இணையதள வங்கி மோசடியில் ஈடுபட்ட 10 போ் கைது
யாத்ரி நிவாஸ் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி மோசடி: ராஜஸ்தான் இளைஞா் கைது

வாகனங்களுக்கு இ-சலான் லிங்க் அனுப்பி நூதன மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



