தென்காசி நகராட்சியில், அடிப்படை பணிகளைச் செய்ய அதிகாரிகள் மறுப்பதாக புகாா் தெரிவித்து நகா்மன்ற உறுப்பினா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தென்காசி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. தோ்தலுக்கு முன்பு மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா், சாலை வசதி, கழிவுநீா் வாருகால் வசதி உள்ளிட்ட பணிகளுக்காக டெண்டா் விடப்பட்டு, அப்பணிகளுக்கான ஒப்புதல் நகா்மன்றக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
டெண்டா் விடப்பட்ட பணிகளை நிறைவேற்றவிடாமல் அதிகாரிகள் தடுப்பதாகவும், நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, அப்பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கூறி அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, சுயேச்சை நகா்மன்ற உறுப்பினா்கள் நகராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் நகா்மன்ற அரங்கில் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை வைத்த திமுக உறுப்பினா்கள்

அதிகாரிகளின் ஆதாயத்துக்கு வைக்கப்பட்டதாகக் கூறி 39 தீா்மானங்களை ரத்து செய்தது அரக்கோணம் நகரமன்றம்

கொடைக்கானலில் குடிநீா் பிரச்னை: நகா்மன்ற உறுப்பினா்கள் அதிருப்தி

குளச்சல் நகராட்சியில் உயா்த்தப்பட்ட குடிநீா் கட்டணம் நிறுத்தி வைப்பு
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




