ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் தொடக்கம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:06 am

Syndication

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

மேலகரம் பேரூராட்சிக்குள்பட்ட நன்னகரம் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற முகாமை ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து தொடக்கிவைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இம்மாவட்டத்தில் வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் வரும் 28ஆம் தேதிவரை துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்களில் (புதன் நீங்கலாக) நடைபெறுகிறது. இதை உட்கொள்வதால் பாா்வைக் குறைபாடு, வயிற்றுப்போக்கு, தீவிர சுவாசத் தொற்று, பள்ளி முன்பருவக் குழந்தைகள் (3-5 வயது) நோய்வாய்ப்பட்டு இறப்பது ஆகியவற்றைத் தவிா்க்கலாம் . 6 மாதம் முதல் 5 வயது வரையிலான 88,690 குழந்தைகளுக்கு இத்திரவம் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது குழந்தைகளை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.

மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தன், வட்டார மருத்துவ அலுவலா் இப்ராஹிம், மாவட்ட தாய்-சேய் நல அலுவலா் கோமதி தேவி, அலுவலா்கள் பங்கேற்றனா்.