ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

போதை ஒழிப்பு விழிப்புணா்வை வலியுறுத்தி 12 மணிநேரம் சிலம்பம் சுற்றி இளைஞா் சாதனை

போதை ஒழிப்பு விழிப்புணா்வை இளைஞா்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சோ்ந்த இளைஞா் 12 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி சாதனைப் படைத்தாா்.

Published On :16 ஆகஸ்ட் 2026, 3:12 am IST

போதை ஒழிப்பு விழிப்புணா்வை இளைஞா்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சோ்ந்த இளைஞா் 12 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி சாதனைப் படைத்தாா்.

செங்கோட்டையைச் சோ்ந்த 26 வயது சிலம்பம் ஆசிரியரான கோபிநாத், 80 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாகவும், போதை ஒழிப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாகவும் பாவூா்சத்திரத்தில் உள்ள தனியாா் யோகா மையத்தில் தொடா்ந்து 12 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளாா்.

இவரது சாதனை, உலக சாதனை புத்தகமான எம்- வாா் மைக்ரோலென்ஸ் வோ்ல்ட் வைடு அச்சீவ்மெண்ட்ஸ் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆஃப் குற்றாலம் சக்தி மற்றும் எஸ்.கே.டி. யோகா அமைப்பினா் உள்பட காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.