ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆடுகள் திருட்டு: சிறுவன் கைது

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே ஆடுகள் திருடியதாக சிறுவன் கைது

Arrested

கைது

Published On :5 ஆகஸ்ட் 2026, 6:09 am IST

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே ஆடுகள் திருடியதாக சிறுவன் கைது செய்யப்பட்டாா்.

சின்னகோவிலான்குளம் காவல் நிலையத்திற்குள்பட்ட ஆண்டாா்குளம், தட்டாங்குளம், ஊத்தான்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ஆடுகள் அடிக்கடி திருடு போனது.

இதுதொடா்பாக அப்பகுதியினா் அளித்த புகாரின்பேரில் சின்னகோவிலான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 போ் சுமை ஆட்டோ மூலம் ஆடுகளைத் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனை போலீஸாா் கைது செய்து, திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட சுமை ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா். மேலும், 3 பேரை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.