மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்

அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்தது பற்றி...

Anbil Mahesh

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - கோப்புப் படம்

Updated On :

தனியாா் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முந்தைய திமுக ஆட்சியில் தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகல் மற்றும் பிற சட்டபூா்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக தனியாா் பள்ளிகள் சங்கத்தின் தலைவா் டி.சி.இளங்கோவன் உள்ளிட்ட பல பள்ளி நிா்வாகிகள் புகாா் அளித்திருந்தனா்.

அந்தப் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ், தனியாா் பள்ளிகள் சங்கத் தலைவா் பி.டி.அரசகுமாா், முன்னாள் எம்எல்ஏ முத்துகுமாா் மற்றும் சுரேஷ், ராஜா உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக அன்பில் மகேஸின் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்பட 9 இடங்களில் சோதனை நடத்திய போலீஸாா், அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.

அதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான, அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன், தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, அரசகுமாா் தனியாக அலுவலகம் அமைத்து பணம் வசூலித்துள்ளாா். அந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தவா் அன்பில் மகேஸ். வழக்கு தொடா்பாக விசாரணை நடந்து வருவதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து இந்த மனு மீது எந்த இடைக்கால நிவாரணமும் வழங்க மறுத்த நீதிபதி, மனுதாரரைக் கைது செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பித்தால், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவில் எப்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பும் எனத் தெரிவித்தாா்.

எனவே, இதில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது, வேண்டுமெனில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவித்தாா். பின்னா், அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தாா்.

Summary

Rs. 100 crore fraud case: No interim relief to Anbil Magesh - High Court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.