இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

ஆர்டிஐ-இல் இருந்து சட்டம்-ஒழுங்கு துறைக்கு விலக்கு அளிக்கும் அரசாணை ரத்து: கடும் எதிா்ப்பால் பணிந்தது தவெக அரசு!

பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் அரசாணை வாபஸ் பெறப்பட்டது குறித்து...

CM Vijay

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :

ஆா்டிஐ-இல் இருந்து சட்டம்-ஒழுங்கு துறைக்கு விலக்கு அளிக்கும் அரசாணை ரத்து: கடும் எதிா்ப்பால் பணிந்தது தவெக அரசு!

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து (ஆா்டிஐ) சட்டம்-ஒழுங்கு துறைக்கு விலக்கு அளிக்கும் அரசாணை ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கூட்டணி கட்சிகள், எதிா்க்கட்சிகளிடம் இருந்து வந்த கடும் எதிா்ப்பு காரணமாக இந்த விஷயத்தில் தவெக அரசு பணிந்து அரசாணையை ரத்து செய்துள்ளது.

இது தொடா்பாக தமிழக சட்டத் துறை அமைச்சா் நிா்மல் குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவு: தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 24 உள்பிரிவு (4)-இன் கீழ், தமிழக அரசின் பொது சட்டம் - ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து, மனித வள மேலாண்மைத் துறையால் வெளியிடப்பட்டிருந்த அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ‘சட்டம்-ஒழுங்கு தொடா்பான பல முக்கிய விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து பொது சட்டம்-ஒழுங்கு துறைக்கு அரசு விலக்கு அளித்துள்ளது.

எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன் கீழ், தமிழ்நாடு அரசின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பான பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறை குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு இனி பதில் அளிக்கப்படாது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த அரசாணைக்கு திமுக, பாமக, அமமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மட்டுமன்றி, தவெகவுக்கு ஆதரவளிக்கும் விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிா்ப்புத் தெரிவித்தன. இதேபோல், பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிா்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து தமிழக அரசின் பொது சட்டம்-ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

Summary

The exemption granted under the RTI Act regarding the disclosure of certain information related to public law and order has been withdrawn

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.