மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் தொடர் மின்வெட்டு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவு...

MK stalin

மு.க. ஸ்டாலின் - DMK

Updated On :

தவெக ஆட்சியில் அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை என மின்வெட்டு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்பட்டு வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சில பகுதியில் இரவில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர்.

மின்வெட்டு பிரச்னை அதிகரித்ததையடுத்து, சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் இதுதொடர்பாக சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். எனினும், தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை தொடர்கிறது. சமீபத்தில் அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளிலும் மின்வெட்டு ஏற்படுவது குறித்து பலரும் பேசி வருகின்றனர்.

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை சரிசெய்யப்பட்டு வருவதாகவும் 3 மாதங்களில் முழுமையாக சரிசெய்யப்படும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் இன்று காலை ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

எனினும் இன்று மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் கலந்துகொண்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசிக் கொண்டிருக்கையில் மின்வெட்டு ஏற்பட்டது. சில வினாடிகளுக்கு பின்னர் மீண்டும் மின்சாரம் வந்தது. ஜெனெரேட்டர் மாற்றப்பட்டதால் சில வினாடிகள் மின்சாரம் தடைப்பட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் தொடர் மின்வெட்டு குறித்து, குறிப்பாக அமைச்சர்களின் நிகழ்வுகளில் மின்வெட்டு ஏற்பட்டது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"த.வெ.க. ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை.

இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் ரிவியூ செய்யவில்லை. ரீலிஸ்-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

DMK Leader MK stalin x post on power cut crisis in tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.