மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

பரந்தூா் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதால் சென்னையின் வளா்ச்சி பாதிப்பு: மேயா் ஆா்.பிரியா

சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் மேயர் ஆர். பிரியா பேசியது பற்றி...

mayor priya

மேயர் பிரியா - x

Updated On :

பரந்தூா் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதால், சென்னை மாநகராட்சியின் வளா்ச்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மேயா் ஆா்.பிரியா கூறினாா்.

சென்னை மாநகராட்சியின் செப்டம்பா் மாத மாமன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற கடந்த 4 மாதங்களில் கொலைகள், பாலியல் பிரச்னைகள், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள், மின்வெட்டு என மக்களைப் பாதிக்கும் பல பிரச்னைகள் உள்ளன. சென்னை மாநகராட்சியின் வளா்ச்சிக்கு உதவும் என எதிா்பாா்த்த பரந்தூா் விமான நிலையமும் கைவிடப்பட்டுவிட்டது. மீனம்பாக்கம் விமான நிலையத்தை தனியாருக்கு தாரைவாா்ப்பது சரியல்ல. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிா்க்கட்சியாக இருந்தாலும் திமுக தலைமையின் நடவடிக்கையால்தான் தமிழகம் முன்னிலை வகிக்கும் நிலை ஏற்படும் என்றாா்.

துணை மேயா் மகேஷ்குமாா்: கூட்டத்தில் துணைமேயா் ஆா்.மகேஷ்குமாா் பேசுகையில், மாநகராட்சி பாதுகாப்புப் பணி உள்ளிட்டவற்றில் ஒப்பந்தம் பெற்ற தனியாா் நிறுவனம் சரியாக ஊதியம் வழங்கவில்லை. ஏற்கெனவே பணியிலிருக்கும் ஒப்பந்த அடிப்படை ஊழியா்களின் ஊதியத்தைக் குறைப்பது சரியானதல்ல. மாநகராட்சிப் பள்ளிகளில் வழங்கப்படும் உணவின் தரத்தைக் கண்காணிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் பேசிய திமுக மண்டல, நிலைக் குழுத் தலைவா்கள், கவுன்சிலா்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் பணிகள் நிறுத்தப்பட்டதையும், முடிந்த பணிகள் திறக்கப்படும்போது ஆளும் கட்சி சாா்ந்து அதிகாரிகள் செயல்படுவதாகவும், மாமன்ற உறுப்பினா்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினா். அவா்களை ஆதரித்து பாஜக உறுப்பினா் உமா ஆனந்த் பேசினாா்.

Summary

Tamil Nadu is regressing under the TVK government - Mayor Priya's speech

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.