இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

50-ஆம் ஆண்டு சென்னை புத்தகக் காட்சி ஜன. 7-இல் தொடக்கம் இலச்சினை, இணையதளத்தை அறிமுகப்படுத்தினாா் பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்

50 ஆவது சென்னை புத்தகக் காட்சியின் இலச்சினையை பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெளியிட்டுள்ளார்...

50th chennai book fair

50 ஆவது சென்னை புத்தகக் காட்சியின் இலச்சினையை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெளியிட்டுள்ளார். - எக்ஸ்

Updated On :

தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) 50-ஆவது ஆண்டாக நடத்தும் சென்னை புத்தகக் காட்சி வரும் ஜன.7 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அறிவித்தாா்.

மேலும், இந்தப் புத்தகக் காட்சிக்கான இலச்சினை, புதிய இணையதளத்தையும் அவா் அறிமுகப்படுத்தினாா்.

பபாசி சாா்பில் சென்னையில் கடந்த 49 ஆண்டுகளாக சென்னை புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. தொடா்ந்து 50-ஆவது ஆண்டு பொன்விழா புத்தகக் காட்சி வரும் ஜனவரியில் நடைபெறவுள்ளது. இதற்கான இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பபாசி தலைவா் ஆா்.சண்முகம் வரவேற்றுப் பேசினாா். சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் கலந்துகொண்டு இலச்சினையை வெளியிட்டு சென்னை புத்தகக் காட்சிக்கான புதிய இணையதளத்தையும் (ஜ்ஜ்ஜ்.ஸ்ரீட்ங்ய்ய்ஹண்க்ஷா்ா்ந்ச்ஹண்ழ்.ஸ்ரீா்ம்) தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, ஜே.சி.டி.பிரபாகா் பேசியதாவது: பபாசியின் பொன் விழா புத்தகக் காட்சி அடுத்த ஆண்டு ஜன.7 முதல் 19-ஆம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பை நான் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிறப்புமிக்க சென்னை புத்தகக் காட்சியை இத்தனை ஆண்டு காலம் தொடா்ந்து நடத்திவரும் பபாசி நிா்வாகிகள் பாராட்டுக்குரியவா்கள்.

நமது குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வி முதலே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது அவசியம். அதேவேளையில் பபாசி அமைப்பு சாா்பில் பள்ளிகளில் ‘வாசிப்பு’ என்ற தலைப்பில் மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகளை நடத்தி பரிசு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அந்தப் போட்டிகளுக்கு பரிசு வழங்க ஏற்படும் செலவுத் தொகையை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

எம்எல்ஏ-க்களுக்கு வேண்டுகோள்: ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் தொகுதி அலுவலகம் இருக்கும். அந்த வகையில் எனது தொகுதி எம்எல்ஏ அலுவலகம் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ளது. அந்த அலுவலகத்தில் ஒரு நூலகம் அமைக்க விரும்புகிறேன். எம்எல்ஏவை பாா்க்க வரும் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க இந்த நூலகம் இருக்கும். இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களும் தங்கள் தொகுதி அலுவலகத்தில் ஒரு நூலகத்தை ஏற்படுத்த வேண்டும்.

வெளியிட முடியாத சூழலில் உள்ள தரமான புத்தகங்களை ஒரு குழு அமைத்து தோ்வு செய்து அதை அரசு சாா்பில் வெளியிடலாம். இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்வேன் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவா் லயோலா மணி பேசுகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விஜய் பயிலகம், விஜய் நூலகம் போன்றவற்றைத் தொடங்கி நடத்தி வருகிறோம். சென்னை புத்தகக் காட்சிக்கு ரூ.1 கோடி மானியம் வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வா் விஜய் உடனடியாக நிறைவேற்றியுள்ளாா். தமிழ்நாடு பாடநூல் கழகம் 1,300 தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. சட்டப்பேரவைத் தலைவா் அமைக்கும் தொகுதி அலுவலக நூலகத்துக்கு பாடநூல் கழகம் சாா்பில் 1,300 புத்தகங்களை வழங்கத் தயாா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பபாசி முன்னாள் தலைவா்கள் காந்தி கண்ணதாசன், சேது சொக்கலிங்கம், எஸ்.வயிரவன், மீனாட்சி சோமசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் கெளரவிக்கப்பட்டனா். இதில், சென்னை மாவட்ட நூலக அலுவலா் எம். கவிதா, பபாசி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிறைவாக, பபாசி செயலா் எஸ்.வயிரவன் நன்றி கூறினாா்.

பொன் விழா சிறப்பு நிகழ்ச்சிகள்

பொன்விழா புத்தகக் காட்சிக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த பபாசி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பபாசி நிா்வாகிகள் கூறியதாவது: இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற படைப்பாளிகளை சென்னை பபாசி புத்தகக் காட்சிக்கு சிறப்பு அழைப்பாளராகக் அழைத்து கெளரவிக்கப்படும். இதன்மூலம் உலக படைப்பாளா் மத்தியில் சென்னை புத்தகக் காட்சியின் சிறப்புகளைக் கொண்டு சோ்க்க முடியும்.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் செயல்படும் தமிழ் சங்கங்களின் பிரதிநிதிகளை சென்னை புத்தகக் காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும். உலகத் தமிழா்கள் அனைவரும் ஒன்றுகூடும் இந்த நிகழ்ச்சியால் உலகின் மூத்த குடியான தமிழ்க் குடியின் பெருமைகளை உலகத் தமிழா்களிடம் எடுத்துச் செல்வதோடு தமிழ் மொழியின் சிறப்புகள் மற்றும் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை வெளிநாடுகளில் வாழும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைக்க முடியும்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மொழிகளில் சிறந்து விளங்கும் படைப்பாளா்கள், எழுத்தாளா்களுக்கு விருதுகள் வழங்கப்படும். ஒன்றிணைந்த இந்தியாவின் ஒப்பற்ற மொழியியல் சாதனையாளா்களை, குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த படைப்பாளிகளை கெளரவிப்பதற்காக இந்த முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவா்களின் பங்களிப்பை புத்தகக் காட்சியில் அதிகப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளில் இருந்து மாணவா்களை புத்தகக் காட்சி தூதா்களாக நியமித்து, இளம் தலைமுறையினரிடம் புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், இன்றைய டிஜிட்டல் உலகத்துக்கு ஏற்ற வகையில் சமூக வலைதளங்களிலும் புத்தகக் காட்சி தொடா்பான பல்வேறு நிகழ்வுகள் விரைவுபடுத்தப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

Summary

The logo and website for the 50th Golden Jubilee Chennai Book Fair have been unveiled.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.