தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு!

மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

மு.க. ஸ்டாலின்

Updated On :

மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுகவின் முப்பெரும் விழா ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் நடைபெறும். அண்ணா, பெரியார் பிறந்தநாளுடன் திமுக தொடங்கப்பட்ட நாளும் இம்மாதத்தில் வருவதால், ஆண்டுதோறும் இம்மாதத்தில் முப்பெரும் விழாவை திமுக நடத்தி வருகிறது.

இந்த விழாவில் கட்சியில் சிறப்பாகப் பணியாற்றியோருக்கு திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்படுகின்றன.

முன்னதாக, கடந்த செப். 15 ஆம் தேதியிலேயே முப்பெரும் விழா நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்தச் சமயத்தில் மு.க. ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக, இவ்விழா ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் மறுதேதி அறிவிக்கப்பட்டு, சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (செப். 19) மாலை 5 மணியளவில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது.

ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானது பற்றி சமீபத்தில் சட்டப்பேரவையில் ஆளும் கட்சியினர் பேசியது சர்ச்சையானது.

அதுதொடர்பாகப் பேசிய முக ஸ்டாலின், “கடந்த வாரம் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டுக்குப் பயணம் செய்ததாக முதலமைச்சரே சொன்னார். இதற்கு முன்னால் நான் வெளிநாட்டுக்குப் பயணம் செய்தபோது என்ன பேசினார்? "சி.எம். சார்... வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?" என்று மேடையில் கத்தினார். அவர் அளவிற்கு நான் இறங்கி வரத் தயாராக இல்லை. இப்போது, நான் அல்ல; தமிழ்நாட்டு மக்கள் அவரைப் பார்த்து, "சி.எம். சார்... இந்தியாவில் இருக்கும் நிறுவனத்திற்கு எதுக்கு லண்டனில் போய் கையெழுத்து போடுகிறீர்கள்?" என்று சத்தமாகக் கேட்கிறார்கள். அதைவிட இன்னொரு பெரிய கொடுமை என்ன தெரியுமா? தொழில்துறை அமைச்சர் இல்லாமல், தொழில்துறை செயலாளர் இல்லாமல் முதலீடுகளை ஈர்க்கப் போயிருக்கிறார் முதலமைச்சர். இதுதான் முதலீடுகளை ஈர்க்கும் லட்சணமா?

அதுமட்டுமல்ல, ரீல்ஸ் வெறி பிடித்த ஆளுங்கட்சியினரால் நூற்றாண்டு புகழ்பெற்ற சட்டமன்றம்கூடத் தனது மாண்பை இழந்து இப்போது நிற்கிறது! நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரைப் பார்த்திருப்பீர்கள்;

நல்லவேளை, கொளத்தூர் மக்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். இந்தக் கொடுமையெல்லாம் பார்க்காமல் இருந்ததற்கு. கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி.

அதை நேரடியாக ஒளிபரப்பு செய்தார்கள். என்ன நடக்கிறது? முதலமைச்சர் சிரிப்பதைப் பார்க்க முடியவில்லை என்று கவலைப்பட்டு, சட்டமன்றப் பேரவையில் ஸ்கிரீன் வைக்கச் சொல்லி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேட்கிறார்கள். இதுதான் நாட்டிற்குத் தேவையா?

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நம்முடைய தம்பி உதயநிதி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், மிசா – சர்க்காரியா கமிஷன் என்று சம்பந்தம் இல்லாமல் பேசி அவதூறுகளைப் பரப்புகிறார்கள்; டைவர்ஷன் செய்கிறார்கள்.

மிசாவைப் பற்றிப் பேசுபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்:

"என் மிசா கைதை உங்கள் எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை!"

"என்னுடைய தியாகத்திற்கு மதிப்பெண் போட உங்கள் எவனுக்கும் தகுதி கிடையாது!"

என் மிசா வரலாற்றை, அண்ணன் சிட்டிபாபு தனது சிறை டைரியில் பதிவு செய்திருக்கிறார். அதுதான் காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டு. அதுமட்டுமல்ல, சிறைச்சாலைச் சித்திரவதைகளைப் பற்றி விசாரிக்க மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் அமைத்த இஸ்மாயில் கமிஷனின் அறிக்கை இருக்கிறது. சாட்சி எல்லாம் சென்று சொல்லி இருக்கிறேன். அனைவரும் வந்து சொன்னார்கள். படிக்கத் தெரிந்தவன் அதையெல்லாம் எடுத்துப் படிக்கட்டும்.

வாக்களித்த மக்கள் வாக்குறுதிகளைப் பற்றிக் கேட்டால், அவதூறு பரப்பி ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கட்சிக்கு நியாயமாக 'தமிழக வெற்றிக் கழகம்' என்று இல்லாமல், 'தமிழக ரீல்ஸ் கழகம்' என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும்! தி.மு.க. தந்தது ரியல் ஆட்சி! இவர்கள் நடத்துவது ரீல்ஸ் ஆட்சி!” என்று பேசியுள்ளார்.

Summary

DMK leader M.K. Stalin has stated that there is no need for him to prove to anyone that he was arrested under MISA.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.