மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

செப்.9-இல் தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: அமைச்சா்கள் நேரில் அழைப்பு

தவெக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தவெக ஆதரவு கட்சிகளுக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்திருப்பது குறித்து...

சென்னை தியாகராய நகரில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலச் செயலா் பெ.சண்முகத்தை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய அமைச்சா்கள் என்.ஆனந்த், ஆதவ் அா்ஜுனா, சி.டி.ஆா். நிா்மல்குமாா்.

Updated On :

தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தவெக ஆதரவு கட்சிகளுக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோருக்கு தவெக நிர்வாகிகளான அமைச்சர்கள் என். ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

தவெக அரசு அமைய ஆதரவு கொடுத்த கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம், செப். 9-ல் நடைபெறவுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, சென்னை கோவளத்தில் ஜூலை 1-ல் நடைபெற்ற முதல் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் பங்கேற்றபோதிலும், இடதுசாரிகள் கட்சிகள் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

Summary

Consultative meeting of TVK alliance parties on September 9

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.