டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 33 காசுகள் உயர்ந்து ரூ. 94.93 ஆக நிறைவு!சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவுமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு!பத்ரிநாத்தில் ஹெலிகாப்டர் விபத்து: வெளிநாட்டு பக்தர்கள் 6 பேரும் பலி! கண்ணுக்குள் வேரூன்றி முளைத்த விதை! ரஷிய மனிதருக்கு நேர்ந்த துயரம்!அரசுப் பணி நியமனம்: வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு! முதல்வர் விஜய் உத்தரவுபத்ரிநாத்தில் இருந்து பக்தர்களுடன் திரும்பிய ஹெலிகாப்டர் விபத்து!காங்கிரஸ் உருவாக்கிய வங்கிகளை மோடி விற்கிறார்! ராகுல் காந்திஅன்பில் மகேஸுக்கு போலீஸ் காவல் கோரிய மனு! நவ. 2-ல் தீர்ப்பு!

அன்பில் மகேஸுக்கு போலீஸ் காவல் கோரிய மனு! நவ. 2-ல் தீர்ப்பு!

அன்பில் மகேஸை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு...

Rs 100 crore scam: Anbil Mahesh appears in court

நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர் - DNS

Updated On :

ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் அனுமதி கோரிய மனு மீதான தீர்ப்பை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ. 100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேஸை கடந்த அக். 26 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

இதனிடையே, அன்பில் மகேஸை 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணைக்காக, புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அன்பில் மகேஸ் இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையின் போது அன்பில் மகேஸ் தரப்பில், ”நீதிமன்ற உத்தரவை மீறி முதல் வகுப்பில் சரியான உணவு வழங்கவில்லை. மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சப்பாத்தி மட்டுமே வழங்கப்பட்டது. அதனை அன்பில் மகேஸால் சாப்பிட முடியவில்லை. உடல் எடை குறைந்துவிட்டது. இரவு நேரத்தில் விளக்கை அணைக்காமல் துன்புறுத்துகின்றனர். அவருக்கு சிறையில் வீட்டு உணவு வழங்க அனுமதி வழங்க வேண்டும்” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனிடையே, வழக்கு தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அன்பில் மகேஸை 5 நாள்கள் காவலில் விசாரிக்க காவல்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, அன்பில் மகேஸை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்குவது தொடர்பான உத்தரவு நவ. 2 ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என்றார்.

மேலும், அன்றைய தினம் அன்பில் மகேஸை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Summary

Plea seeking police custody of Anbil Mahesh - Verdict on Nov. 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.