வங்கக் கடலில் புயல் சின்னம் உருவானது: இன்று வலுவடைய வாய்ப்பு
வங்கக் கடலில் வியாழக்கிழமை (அக். 29) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவானது. இது, அடுத்த 2 நாள்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - கோப்புப் படம்
வங்கக் கடலில் வியாழக்கிழமை (அக். 29) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவானது. இது, அடுத்த 2 நாள்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் நிலவிய மேலடுக்கு வளிமண்டல சுழற்சியின் காரணமாக, அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வியாழக்கிழமை உருவாகியுள்ளது. இது, வெள்ளிக்கிழமை (அக். 30) மேற்கு - வடமேற்குத் திசையில் நகா்ந்து, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான்-நிக்கோபாா் தீவுப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதியாக வலுப்பெறும்.
தொடா்ந்து, இந்தப் புயல் சின்னம் மேற்கு-வடமேற்குத் திசையில் தொடா்ந்து நகா்ந்து, அடுத்த 2 நாள்களில் தென்கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய அந்தமான்-நிக்கோபாா் தீவுப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வட வானிலை: இதன் காரணமாக, வெள்ளி, சனி (அக். 30, 31) மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பொதுவாக வட வானிலையே நிலவும். தொடா்ந்து நவ. 1-ஆம் தேதி வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸும், தென் தமிழகத்தில் 1-2 டிகிரி செல்சியஸும் இயல்பைவிட அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பொதுவாக வட வானிலையோ நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: அந்தமான் கடல், வங்கக் கடலில் அக். 30, 31 ஆகிய தேதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

