தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!எஸ்ஐஆர் ரத்து உள்ளிட்ட 9 கோரிக்கைகள்: குடியரசுத் தலைவருக்கு மு.க. ஸ்டாலின் மனு!முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி! பசும்பொன் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!4 மாநிலங்களில் 28 எம்எல்சி தேர்தல் முடிவுகள்! காங்கிரஸ் பூஜ்ஜியம்!இந்திய சென்டிரல் வங்கியில் ரூ.14 கோடி மாயம், 187 பரிவர்த்தனைகள்! திருடியது எப்படி? யார்?உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!

முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி. மீது வழக்குப்பதிவு!

முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, எம்.பி. கலாநிதி வீராசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

முன்னாள் அமைச்சர் சேகர் பாபு.

Updated On :

காவல் துறையினரை அவதூறாகப் பேசிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள், பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேஸை அக். 27 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

விசாரணைக்குப் பின்னர் அன்பில் மகேஸ் கைது நடவடிக்கை நடைபெற்ற இடத்தில், அவரது ஆதரவாளர்களும் கட்சி நிர்வாகிகளும் பெருமளவில் திரண்டனர்.

அப்போது அங்குப் பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அன்பில் மகேஸ் கைது நடவடிக்கையில் காவல் துறையினரை நோக்கி அவதூறான சொற்களைப் பேசியதாகவும், அரசு அதிகாரிகளின் கடமையைச் செய்ய விடாமல் தடுத்து இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சம்பவ இடத்தில் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் மற்றும் காவல் அதிகாரிகளின் புகாரின் அடிப்படையில் துரிதமான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விவகாரத்தில் நேரடியாகத் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் மீது வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர, கைது சம்பவத்தின் போது காவல் துறையினருக்கு எதிராகக் செயல்பட்டதாக அடையாளம் காணப்பட்ட 10 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Summary

A case has been registered against 10 individuals, including former minister Sekar Babu and MP Kalanidhi Veeraswamy, in connection with making derogatory remarks against the police.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.