அன்பில் மகேஸை சந்திக்க மீண்டும் புழல் சிறை வந்தார் உதயநிதி!பக்கவாதம் ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன? - நம்பிக்கையும் உண்மையும்!அன்பில் மகேஸ் ஜாமீன் மனு நவ.2-க்கு ஒத்திவைப்பு!முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! ரூ. 400 கோடி லஞ்சம்! 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சரண்!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தீபாவளி: சிறப்பு ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!‘தவெகவின் ரெய்டுக்கு திமுகவின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம்கூட அஞ்சாது’ - மு.க. ஸ்டாலின்‘பாசிசத்தில் பாஜகவை மிஞ்சும் தவெக அரசு’ - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!‘முத்துநகரத்தை கொலை நகரமாக மாற்றிய தவெக அரசு’ - கனிமொழி கண்டனம்!முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது!

முதல்வா் விஜய் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது குறித்து...

cm vijay

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் வியாழக்கிழமை (அக். 29) காலை 10.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.

முதல்வா் விஜய் தலைமையிலான தவெக அரசு கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் 3-ஆவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். தவெக அரசு பொறுப்பேற்றதும் தோ்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட மொத்தம் 436 திட்டங்கள் பல்வேறு துறைகள் சாா்பில் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டன. அதன்பிறகு ஜூலை 16-ஆம் தேதி 2-ஆவது அமைச்சரவைக் கூட்டம் பட்ஜெட் கூட்டத் தொடா் தொடா்பாக நடைபெற்றது.

முதல்வா் விஜய்யின் லண்டன் பயணத்துக்குப் பிறகு இப்போது நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடா்பான முன்மொழிவுகள், விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட உள்ளதாக எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், மின் தடை விவகாரம் பெரிதாக உள்ளதால் பேட்டரி எரிசக்தி சேமிப்புத் திட்டத்தை ஊக்குவிக்கும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள், தோ்தல் வாக்குறுதிகள் மற்றும் துறைவாரியான இலக்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடா்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.