5 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்! 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம்ஆயுதங்களால் மட்டுமே இனி போர் நடக்காது! பொருளாதாரத் தாக்குதல் மோசமானது: பிரதமர் மோடிதிண்டுக்கல்: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!

சமையல் கலைஞர் செஃப் தாமு மறைவு குறித்து....

Updated On :

சமையல் கலைஞர் செஃப் தாமு உடல்நலக் குறைவால் இன்று (அக். 25) காலமானார்.

கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று சந்த சமையல் கலைஞர் தாமு, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர், சமையல் கலைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக மக்களிடையே பிரபலமான சமையல் கலைஞராக அறியப்படும் செஃப் தாமு, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் சமையல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானார். குறிப்பாக, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களைப் பெற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி பிரிவில் முனைவர் பட்டம் (Ph.D.) பெற்ற முதல் இந்திய சமையல் கலைஞர் செஃப் தாமு ஆவார்.

கடந்த 2010 ஆம் ஆண்டில், 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 விநாடிகளில் 617 விதமான உணவு வகைகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனைப் படைத்தார்.

சமையல் துறையில் இவரது 40 ஆண்டுகளுக்கும் மேலான சேவையைப் பாராட்டி, மத்திய அரசு கடந்த 2025-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

கள்ளப்படம், உள்குத்து உள்ளிட்ட படங்களில் சமையல் கலைஞராகவும் சில திரைப்படங்களில் குணசித்திர பாத்திரங்களிலும் செஃப் தாமு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Chef Damu passed away today (Oct. 25) due to ill health.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.