சென்னையில் இன்று மழை எப்படி இருக்கும்? மற்ற மாவட்டங்களில்..?
தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல்...

சென்னையில் இன்று மழை தொடருமா? - ENS
சென்னையில் இன்று (அக். 23) லேசான தூரல் மழை இருக்கும் என்றும் அக். 24, 25, 26 தேதிகளில் சென்னையில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தமிழ்நாட்டிற்கு மீண்டும் ஒரு நல்ல நாள். மழையுடன் சென்னைக்கு விடிந்திருக்கிறது.
சென்னையில்....
இன்று தென் சென்னையிலிருந்து மேகங்கள் மெதுவாக சென்னையை நோக்கி நகரும். சென்னையின் கடலோரப் பகுதிகளில் மழை தொடங்கி, நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும்.
இன்று காலை சூரியன் உதிக்கத் தொடங்கும்போது இந்த மழை பலவீனமடையும். சென்னையில் லேசான தூரல் மழை தொடரும்.
இன்று சென்னைக்கு மழைக்கான சிறந்த நாள் அல்ல (அதாவது பெரிய மழை இருக்காது). அக். 24, 25, 26 ஆகிய தேதிகள் சென்னைக்கு மிகவும் நல்ல நாள்கள். இந்த நாள்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
உள் தமிழ்நாடு - டெல்டா, தென் தமிழ்நாடு பகுதிகள், கடலூர்
விருதுநகர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தென்காசி, திருப்பூர், அரியலூர் மற்றும் டெல்டா பகுதிகளான மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்யும்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், "அடுத்த 4 - 5 நாள்களில் உருவாகும் புயல், தமிழ்நாட்டைப் பாதிக்காமல் ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு அர்னாப் என்று பெயரிடப்படும்" என்று கூறியுள்ளார்.
Good morning all, what day it was once again for Tamil Nadu. Chennai to wake up to rainy morning
— Tamil Nadu Weatherman (@praddy06) October 23, 2026
Chennai
----------
After hours and hours the clouds from south Chennai is slowly moving into Chennai. Rains to start from coastal areas of Chennai and cover most of the city areas.⦠pic.twitter.com/ArU6qrOovI
Summary
Tamil Nadu Weatherman about areas likely to receive rain in Tamil Nadu today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

