நாம் தமிழர் கட்சி கார்த்திகா கோவை சிறையில் இருந்து விடுதலை!
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா விடுதலை செய்யப்பட்டது குறித்து...

கைது செய்யப்பட்ட காா்த்திகா - கோப்புப் படம்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, தவெக தலைவரும் முதல்வருமான விஜய்யின் பிரசாரப் பாதையில் மறியலில் ஈடுபட்டதாக, நாதக வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் தமிழக காவல் துறையினரால் புதன்கிழமை (அக். 21) கைது செய்யப்பட்டனர்.
போலீசார், தவெக தொண்டரை தாக்க முயன்றதாகவும், அவதூறு விடியோ பரப்பியதாகவும் கார்த்திகா உள்பட 9 பேர் மீது 12-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கார்த்திகா மனு தாக்கல் செய்தார்.
ஆதாரங்களுடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் வாதிக்கப்பட்ட நிலையில், அரசியல் நோக்கத்துடன் வழக்குப் பதியப்பட்டிருப்பதாக கார்த்திகா தரப்பிலும் வாதிட்டனர். இதனையடுத்து, பதியப்பட்ட 4 வழக்குகளிலும் ஜாமீன் மனுவை நீதிமன்றம் ஏற்றது.
கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், கோவை சிறையிலிருந்து கார்த்திகா விடுதலை செய்யப்பட்டார். சிறைவாசலில் காத்திருந்த நாம் தமிழர் கட்சியினர், கார்த்திகாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Summary
NTK candidate Karthika released on bail
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


